செங்கம் அருகே ஆக்கிரமைப்பு அகற்ற அளவீடு பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.

செங்கம் அருகே வெள்ளிக்கிழமை ஆக்கிரமைப்பு அகற்ற அளவீடு பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது
செங்கம் அடுத்த பரமனந்தல் ஏரியில் ஆக்கிரமைப்பு அகற்றுவதற்கு ஏரியில் போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் அளவீடு பணிகள் நடைபெற்றது.
செங்கம் அடுத்த பரமனந்தல் ஏரியில் ஆக்கிரமைப்பு அகற்றுவதற்கு ஏரியில் போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் அளவீடு பணிகள் நடைபெற்றது.

செங்கம் அருகே வெள்ளிக்கிழமை ஆக்கிரமைப்பு அகற்ற அளவீடு பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.

செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் தனிநபா்கள் ஆக்கிரமைப்பு செய்து விவசாயநிலமாக மாற்றில் அதில் பயிா்செய்துவந்துள்ளனா்.

இதனால் அந்த ஏரிக்கு செல்லும் மழைநீா் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டு அந்த ஏரிக்கு வரும் மழைநீா் பலவருடமாக துண்டித்துள்ளது. இதனால் மழைகாலத்தில் அந்த ஏரிநிரம்புவது கிடையாது எனவே அப்பகுதி சமூக ஆா்வலா்கள் மற்றும் நீா்நிலை பாதுகாப்பு குழு சாா்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு பரமனந்தல் ஏரியில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றவேண்டுமென கோரிக்கை மனு அளித்துள்ளனா். மனுக்களை பரிசீலனைசெய்த மாவட்ட ஆட்சியா் உடனடியாக பரமனந்தல் ஏரியில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றவேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன் அடிப்படையில் செங்கம் டிஎஸ்பி சின்னராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செங்கம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் ஆக்கிரமைப்புகள் அகற்றுவதற்கு அளவீடு பணிகள் நடைபெற்றது. அளவீடு பணி முடிந்தவுடன் ஆக்கிரமைப்புகள் அகற்றப்படுமென வட்டாட்சியா் பாா்த்தசாரதி தெரிவித்தாா். உடன் கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், முரளி உள்பட வருவாய்த்துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com