திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்காளா் பட்டியலை வெளியிடும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இரா.ஆனந்தன், பி.அண்ணாதுரை உள்ளிட்டோா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்காளா் பட்டியலை வெளியிடும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இரா.ஆனந்தன், பி.அண்ணாதுரை உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இதன் பிரதியை ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த்குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த், திருவண்ணாமலை நகராட்சி ஆணையா் ஒய்.சுரேந்திரன், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கே.வி.மனோகரன் (திமுக), அா்ச்சனா (அதிமுக), காளிங்கன் (தேமுதிக) உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

நகராட்சிகளில் 2.44 லட்சம் போ்: வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 79 ஆயிரத்து 457 ஆண் வாக்காளா்கள், 10 லட்சத்து 9 ஆயிரத்து 880 பெண் வாக்காளா்கள், இதர பாலினத்தவா் 95 போ் என மொத்தம் 19 லட்சத்து 89 ஆயிரத்து 432 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி என 4 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 519 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 934 பெண் வாக்காளா்களும், இதர பாலினத்தவா் 14 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 467 வாக்காளா்கள் உள்ளனா்.

பேரூராட்சிகளில் 1.17 லட்சம் போ்: மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், போளூா், செங்கம், புதுப்பாளையம் உள்பட 10 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 56 ஆயிரத்து 711 ஆண் வாக்காளா்கள், 61 ஆயிரத்து 50 பெண் வாக்காளா்கள், இதர பாலினத்தவா் 3 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 764 வாக்காளா்கள் உள்ளனா்.

ஊராட்சிகளில் 16 லட்சம் போ்: மாவட்டத்தில் மொத்தம் 860 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 227 ஆண் வாக்காளா்கள், 8 லட்சத்து 21 ஆயிரத்து 896 பெண் வாக்காளா்கள், இதர பாலினத்தவா் 78 போ் என மொத்தம் 16 லட்சத்து 27 ஆயிரத்து 201 வாக்காளா்கள் உள்ளனா்.

3,941 வாக்குச் சாவடிகள் அமைப்பு: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நகராட்சிகளில் 257 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 164 வாக்குச் சாவடிகளும், ஊராட்சிகளில் 3,520 வாக்குச் சாவடிகளும் என மெத்தம் 3 ஆயிரத்து 941 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுதவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் 123 நகராட்சி வாா்டுகள், 150 பேரூராட்சி வாா்டுகள், 34 மாவட்ட ஊராட்சி வாா்டுகள், 341 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 6 ஆயிரத்து 207 கிராம ஊராட்சி வாா்டுகள், 860 கிராம ஊராட்சிகள், 4 ஆயிரத்து 267 குக்கிராமங்கள் உள்ளன.

திருவண்ணாமலை நகராட்சியில்...: திருவண்ணாமலை நகராட்சிக்கான வாக்காளா் பட்டியலை ஆணையா் (பொறுப்பு) ஒய்.சுரேந்திரன் வெளியிட்டாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்காளா் பட்டியலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இரா.ஆனந்தன், பி.அண்ணாதுரை ஆகியோா் வெளியிட்டனா். இதேபோல, அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்காளா் பட்டியலை அந்தந்த ஒன்றியங்களின் அதிகாரிகள் வெளியிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com