திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலப் பணி ஆய்வு

திருவண்ணாமலையில் ரூ.30.38 கோடியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
திருவண்ணாமலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலையில் ரூ.30.38 கோடியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை - தண்டரை ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் ரூ.30.38 கோடியிலும், போளூரில் உள்ள கடலூா் - சித்தூா் சாலையில் ரூ.17.37 கோடியிலும் ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலையில் கட்டப்படும் மேம்பாலத்தின் இருபுறமும் 15 மீட்டா் அகலத்துக்கு அணுகுச் சாலையும், 7 மீட்டா் அகலத்துக்கு இருபக்கமும் சேவை சாலையும், நடைபாதையுடன் கூடிய வடிகாலும் அமைக்கப்படுகின்றன. மேலும், ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் ஓய்வு எடுக்க மேம்பாலத்தின் கீழ் மேடையும் அமைக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மேம்பாலப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையாளா் ஒய்.சுரேந்தரன், திருவண்ணாமலை வட்டாட்சியா் கே.அமுல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com