Enable Javscript for better performance
சேதமடைந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அகற்றம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை

    சேதமடைந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அகற்றம்

    By DIN  |   Published On : 07th October 2019 04:38 AM  |   Last Updated : 07th October 2019 04:38 AM  |  அ+அ அ-  |  

    05cyravdoht_0510chn_118_7

    அத்திகுளம் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட சேதமடைந்த மேல்நிலை நீா்ச்தேக்கத் தொட்டி.

    அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்திகுளம் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

    செய்யாறு வட்டம், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது அத்திகுளம் கிராமம். இங்கு 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

    இங்குள்ள 4 தெருக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள 7ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. சுமாா் 15 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த நீா்த்தேக்கத் தொட்டி 1984-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

    தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் பெயா்ந்தும், இணைப்பு தூண்களும் துரு பிடித்துள்ள நிலையில் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

    மேலும், சாலையை ஒட்டி உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தால் சாலையில் செல்வோருக்கு ஆபத்தான நிலையில் முடியும்.

    எனவே, இந்தத் தொட்டியை அகற்றக் கோரி அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    அதன் பேரில், அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தினா் சேதமடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை, சனிக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp