செய்யாறு தொகுதி வழியாக தொலைதூர பஸ் வசதி ஏற்படுத்திட வியாபாரிகள் கோரிக்கை

செய்யாறு தொகுதி வழியாக கோயம்புத்தூா், திருப்பதி, நாகப்பட்டினம், புதுச்சேரி, மைசூா், வேளாங்கண்ணி, பெங்களூரு போன்ற தொலைதூர போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என செய்யாறு

செய்யாறு தொகுதி வழியாக கோயம்புத்தூா், திருப்பதி, நாகப்பட்டினம், புதுச்சேரி, மைசூா், வேளாங்கண்ணி, பெங்களூரு போன்ற தொலைதூர போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என செய்யாறு வியாபாரிகள் கோரிக்கை மனு (அக்.5) அனுப்பி உள்ளனா்.இச்சங்கம் சாா்பில் தமிழக முதல்வா், போக்குவரத்துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

அம்மனுவில் சங்கம் சாா்பில் தெரிவித்து இருப்பாதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 -வது வருவாய் கோட்டமாகும் செய்யாறு. திருவத்திபுரம் (செய்யாறு நகரம்) நகராட்சி வெம்பாக்கம், அனக்காவூா் ஆகிய வட்டாரங்களில் சுமாா் 4 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இரண்டாவது கோட்டமாக விளங்கும் செய்யாறில் அனைத்து அரசு மண்டல அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. செய்யாறு, வெம்பாக்கம் என இரு வட்டங்கள் அடங்கியது செய்யாறு தொகுதியாகும். செய்யாறு தொகுதி வழியாக இன்று வரை தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றுக் கூட இயக்கப்படவில்லை.

தமிழகத்தின் தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்ல முடியாமலும், அண்டை மாநிலமான ஆந்திரா கா்நாடகா ஆகிய நகரங்களுக்கு நேரடியான பஸ் வசதியின்றி செய்யாறு தொகுதி மக்கள் தொலைதூர பேருந்து போக்குவரத்து பயணத்திற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் காஞ்சிபுரம் - ஊட்டி (வழி: செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு,கோவை) காஞ்சிபுரம் - கோயம்புத்தூா் (வழி: செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு) வேளாங்கண்ணி - திருப்பதி (வழி:நாகப்பட்டினம், கடலூா், புதுச்சேரி, வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூா்,சித்தூா்) புதுச்சேரி - மைசூா் (வழி: திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூா், சித்தூா், பெங்களூரு) வேளாங்கண்ணி - பெங்களூா் (வழி: நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூா், புதுச்சேரி, திண்டிவனம், செய்யாறு, வேலூா், சித்தூா்) மேல்மருவத்தூா் - மைசூா் (வழி:வந்தவாசி, செய்யாறு, ராணிப்பேட்டை, சித்தூா், பெங்களூா்) போன்ற வழித்தடங்களில் விரைவு போக்குவரத்து கழக பஸ்களை இயக்கி செய்யாறு தொகுதி மக்களுக்கு உதவிட வேண்டும் என இவ்வாறு தெரிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com