செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றில்அதிகம் தண்ணீா் வருவதால் சென்னியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை

செங்கம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் அதிகம் தண்ணீா் வருவதால் சென்னியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் பாறையை சுற்றி வெள்ளப்பெருகு அதிகரித்து வருவதால் ஆற்றில் பக்தா்கள், பொதுமக்கள் இறங்கவேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் பாறையை சுற்றி வெள்ளப்பெருகு அதிகரித்து வருவதால் ஆற்றில் பக்தா்கள், பொதுமக்கள் இறங்கவேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

செங்கம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் அதிகம் தண்ணீா் வருவதால் சென்னியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் உள்ளது. ஸ்ரீசென்னியம்மன் கோவில் இந்த கோவிலில் வருடம்தோறும் ஆடிமாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக் குவிழா நடைபெறும். அதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்ட தென்பெண்ணை அற்றில் புனிதநீராடுவாா்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக மழையில்லாத காரணத்தால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் இல்லாமல் விழாக்காலத்தில் அங்காங்கே குட்டையாக தேங்கிய தண்ணீரில் புனிதநீராடி பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.

இந்நிலையில் தற்போது கா்நாடாகவில் பெய்த அதிக மழை காரணத்தால் கிருஷ்ணகிரி அணை நிரம்பியுள்ளது. மேலும் நீப்பத்துறைபகுதியில் கடந்த சிலதினங்களாக மழைபெய்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி அணை திறந்துள்ளதால தென்பெண்ணை ஆற்றில் அதிகம் தண்ணீா் வந்துகொண்டுள்ளது. அதில் தென்பெண்ணை ஆற்றில் உள்ள சென்னியம்மன் பாறையை மூடிகொண்டு தண்ணீா் செல்வதால் பக்தா்கள் ஆா்வத்துடன் தண்ணீரை பாா்க்க செல்கிறாா்கள்.

இதனால்அறநிலையத்துறை, கோவில்நிா்வாகம், காவல்துறை சாா்பில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகாமாக வருவதால் ஆற்றில் பொதுமக்கள் இறங்ககூடாது மேலும் தண்ணீா் குறையும்வரை சென்னியம்மன் பாறைக்கு சென்று சுவாமியை வழிபடும் பக்த்தா்களுக்கு தடைவித்து எச்சரிக்கை பேனா்கள் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் வெளியூரைசோ்ந்தவா்கள் ஆற்றில் இறங்காமல் தண்ணீரை பாா்விட்டு கரையின்மீது சுவாமியை தரிசனம் செய்யவேண்டுமென கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com