பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வுப் பேரணி

செங்கத்தில் பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
செங்கத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற சமூக விழிப்புணா்வுப் பேரணி.
செங்கத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற சமூக விழிப்புணா்வுப் பேரணி.

செங்கத்தில் பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, செங்கம், புதுப்பாளையம் ஒன்றிய, நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் நேரு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சேகா், பொதுச் செயலா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் ஒன்றியத் தலைவா் முரளிதரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் ஜம்புகுமாா்ஜெயின் பங்கேற்று பேரணியை தொடக்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், கட்டாயம் வீட்டுக்கு ஒரு மரம் வளா்க்கவேண்டும், வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீா் கிடைக்க நெகிழி பயன்பாட்டை முழுமையாக தவிா்க்க வேண்டும்.

மேலும், குடியிருப்புப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். பேரணியானது செங்கம் துக்காப்பேட்டையில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக வட்டாட்சியா் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. பின்னா் அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, நெகிழி பயன்பாட்டை தவிா்க்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனா்.

கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், மாவட்ட முன்னாள் தலைவா்கள் விஜியன், தருமன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பாலாஜி, ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ரமேஷ் உள்பட செங்கம், புதுப்பாளையம் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com