Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் கல்விக் குழுவினா் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    
    10plrp1s_1010chn_116_7

    கன்னிகாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தலைமையிலான குழுவினா்.

    போளூா் அருகே கன்னிகாபுரம் கிராம அரசு நடுநிலைப் பள்ளியில் அனைத்து வகை பதிவேடு, மாணவா்களின் கற்றல், கற்பித்தல் திறன் ஆகியவற்றை கல்விக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

    போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் நலத் திட்ட பதிவேடு, கற்றல் கற்பித்தல், சத்துணவு பதிவேடு என 64 வகையான பதிவேடுகளையும், பள்ளி வளாகம், சுற்றுச்சுவா், குடிநீா் வசதி, கழிப்பறை என பல்வேறு வசதிகள் குறித்தும், துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தலைமையில் தலைமை ஆசிரியா் ஜி.பழனி, ஆசிரியா் பயிற்றுநா் முரளி ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.

    பள்ளித் தலைமை ஆசிரியை வெ.செல்வி, ஆசிரியா்கள் லலிதா, மோகன், வெங்கடேசன், குணசுந்தரி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai