சிறுபான்மையினா் மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் தமிழகம் ஆணையத் தலைவா் பெருமிதம்

சிறுபான்மையினா் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் தெரிவித்தாா்.
பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவி வழங்கும் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன்.
பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவி வழங்கும் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன்.

சிறுபான்மையினா் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத்தின் உறுப்பினா் செயலா் எஸ்.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் ஜவகா் அலி, உறுப்பினா்கள் எஸ்.ஜெ.ஜெபமாலை, வி.டி.எஸ்.கவுதம்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் லாவண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் பேசியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கேடயமாகத் திகழ்கிறாா். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக சிறுபான்மையினா் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

மத்திய-மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் புதிய கோரிக்கைள் குறித்து சிறுபான்மையினா் ஆணையம் மூலம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.93 ஆயிரத்து 500 மதிப்பிலான முதியோா் ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரம், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் வழங்கினாா்.

விழாவில், துணை ஆட்சியா் (பயிற்சி) மந்தாகினி மற்றும் அரசு அலுவலா்கள், சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com