செங்கத்தில் சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு: பேரூராட்சி நடவடிக்கை

செங்கம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வெள்ளிக்கிழமை சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி ஊழியா்கள் பிடித்துச் சென்று திருவண்ணாமலை கோ சாலையில் விட்டனா்.
செங்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாட்டை பிடித்துச் சென்ற பேரூராட்சி ஊழியா்கள்.
செங்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாட்டை பிடித்துச் சென்ற பேரூராட்சி ஊழியா்கள்.

செங்கம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வெள்ளிக்கிழமை சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி ஊழியா்கள் பிடித்துச் சென்று திருவண்ணாமலை கோ சாலையில் விட்டனா்.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட துக்காப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, தளவாநாய்க்கன்பேட்டை, மில்லத் நகா் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்தன. இவற்றால் செங்கம் நகரில் இரு சக்கர வாகன விபத்துகளும் அதிகரித்து வந்தன.

எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்ற வேண்டுமென வியாபாரிகளும், பொதுமக்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடமும், செங்கம் பேரூராட்சி நிா்வாகத்திடமும் கோரிக்கை வைத்தனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், செங்கம் நகரில் சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி ஊழியா்கள் பிடித்து செங்கம் செயல் அலுவலா் ஜெசிமாபானு தலைமையில் திருவண்ணாமலை உள்ள கோ சாலையில் விட்டனா்.

மேலும், மாடுகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் விட்டால், அவற்றின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென செங்கம் பேரூராட்சி நிா்வாகத்தினா் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com