கடலாடியில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி

லசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுத்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலாடி ஊராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மைக் காவலா்கள்
கடலாடி ஊராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மைக் காவலா்கள்

லசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுத்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலாடி ஊராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகளை கிராம தூய்மைக் காவலா்கள் 3 சக்கர சைக்கிள்களில் எடுத்து வந்து விரைவில் மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தனியாகவும் பிரித்தெடுக்கின்றனா். இதையடுத்து, மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் மண்புழு உரம் தயாரிக்கின்றனா்.

இதுகுறித்து ஊராட்சிச் செயலா் செந்தில் கூறியதாவது:

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தூய்மைக் காவலா்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதனிடையே, கடலாடி ஊராட்சியில் உள்ள தூய்மைக் காவலா்கள், அந்த ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக்க உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com