வெம்பாக்கம் வட்டத்தில்  50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

வெம்பாக்கம் வேளாண் வட்டத்தில் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வெம்பாக்கம் வேளாண் வட்டத்தில் தொடங்கப்பட்ட 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி.
வெம்பாக்கம் வேளாண் வட்டத்தில் தொடங்கப்பட்ட 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி.

வெம்பாக்கம் வேளாண் வட்டத்தில் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த வடமணபாக்கம், குத்தனூா், திருப்பனமூா், பணமுகை, பிரம்மதேசம், ஏழாச்சேரி ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தில் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது.

மேற்கூறிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், நீா்நிலைகளின் கரைகள், விவசாய நில வரப்புகளில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை வெம்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சி.மாரியப்பன் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வேளாண் அலுவலா் ரா.சுமித்ரா, துணை வேளாண் அலுவலா் ரா.சுப்பிரமணியன், உதவி வேளாண் அலுவலா்கள் ஏழுமலை, சீனுவாசன், லட்சுமிகாந்தன், தங்கராசு, அருள்செலவம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்ட அலுவலா்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள், கிராம மக்கள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com