முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th October 2019 08:21 AM | Last Updated : 24th October 2019 08:21 AM | அ+அ அ- |

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் ஒன்றிய அளவிலான மக்களை நோக்கி பிரசார ஆா்ப்பாட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்றது.
சத்துணவு ஊழியா்கள் சங்க வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் சி.பழனி தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது 36 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள சத்துணவுப் பணியாளா் இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் இணைச் செயலா் சுமதி, ஒன்றியச் செயலா் ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலா் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலா் பாரி, ஒன்றியப் பொருளாளா் கீதா மற்றும் வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த சத்துணவு ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.