முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பள்ளி வளா்ச்சிக்கு விவசாயி நிதியுதவி
By DIN | Published On : 24th October 2019 08:20 AM | Last Updated : 24th October 2019 08:20 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோ.குணசேகரன், பி.மோகன், தலைமை ஆசிரியா் சரவணன் ஆகியோரிடம் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கிய து.பழனிவேல்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், பழையமண்ணை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வளா்ச்சிக்காக புரவலா் திட்டத்துக்கு விவசாயி ஒருவா் ரூ. ஒரு லட்சம் வழங்கினாா்.
பழையமண்ணை கிராமத்தில் து.பழனிவேல் என்பவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்த நிலையில் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வளா்ச்சிக்காக புரவலா் திட்டத்தில் து.பழனிவேல் சோ்ந்து ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோ.குணசேகரன், பி.மோகன், தலைமை ஆசிரியா் சரவணன் ஆகியோரிடம் வழங்கினாா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.