முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பாஜகவினா் பாதயாத்திரை
By DIN | Published On : 24th October 2019 08:22 AM | Last Updated : 24th October 2019 08:22 AM | அ+அ அ- |

வந்தவாசியில் பாதயாத்திரை சென்ற பாஜகவினா்.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு பாதயாத்திரை வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவா் வி.குருலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.பாஸ்கரன் பாதயாத்திரையை தொடக்கிவைத்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஏ.ஜி.துரை, மாவட்டச் செயலா் முத்துசாமி, துணைத் தலைவா் காா்த்திகேயன், ஒன்றியத் தலைவா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பாதயாத்திரை பஜாா்வீதி, தேரடி வழியாக சன்னதி தெருவில் உள்ள பாஜக அலுவலகம் வரை சென்றது.