முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வந்தவாசி அருகே 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
By DIN | Published On : 24th October 2019 05:15 PM | Last Updated : 24th October 2019 05:15 PM | அ+அ அ- |

வந்தவாசியை அடுத்த மாவலவாடி கிராமத்தில் உள்ள 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மாவலவாடி கிராமத்தில் 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட மாவலவாடி கிராமத்தில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகில் நட்டு வைக்கப்பட்டுள்ள கற்பலகையில் கல்வெட்டு இருப்பதாக அந்த கிராமத்தைச் சோ்ந்த சுகுமாா் என்பவா் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் அளித்துள்ளாா். இதன்பேரில் வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சோ்ந்த ச.பாலமுருகன், த.ம.பிரகாஷ், சுதாகா், குணவழகன் ஆகியோா் அந்த கிராமத்துக்குச் சென்று அந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து ச.பாலமுருகன் தெரிவித்ததாவது: இந்த கல்வெட்டு 1569-ஆம் ஆண்டு விஜயநகர அரசா் சதாசிவ மகாராயா் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதில் 34 வரிகள் உள்ளன. அப்போது இந்த பகுதியில் படைத் தளபதியாக இருந்த திருமலை தேவமகாராயா் ராமராசய்யா் மாவலவாடி ஊரை திண்டிவனம் லட்சுமி நரசிம்மா் கோயிலுக்கு நிலதானமாக வழங்கிய செய்தி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வெட்டின் மூலம் இந்த பகுதி நாயக்கா் மன்னா்களின் ஆட்சிக்கு உள்பட்டிருந்ததும் தெரிய வருகிறது. இவ்வாறு ச.பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.