போட்டிகளில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 24th October 2019 08:20 AM | Last Updated : 24th October 2019 08:20 AM | அ+அ அ- |

பாராட்டு பெற்ற அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்கள்.
பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்கள் பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றால் பாராட்டு பெற்றனா்.
ஆரணி கல்வி மாவட்டம் சாா்பில் கலா உத்சவ் தனித்திறன் போட்டிகள் அன்மையில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி பாட்டுப் போட்டியில் முதல் இடமும், மாணவா் குமரன் ஓவியப் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
இவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் மாலவன், ஆசிரியா்கள் இளையராஜா, செந்தில், கோகிலா, அரிதாஸ், சந்தோஷ்குமாா், குபேந்திரன் ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்தினா்.