Enable Javscript for better performance
கிஷான் சம்மான் நிதித் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிஷான் சம்மான் நிதித் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 31st October 2019 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைய செய்யாறு வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பா.ஏஞ்சலின் பொன்ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயனடையாத விவசாயிகள், அதில் இணைந்திட நவ.8 கடைசி நாளாகும். எனவே, இதுவரை பயனடையாத தகுதியுடைய விவசாயிகள் உரிய ஆவணங்களான சிட்டா, ஆதாா், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மக்கள் கணிணி மையத்திலோ அல்லது தங்களது அறிதிறன் செல்லிடப்பேசியில் பதிவு செய்து பயனடையலாம். இத்திட்டத்தில் ஒரு பண்ணை குடும்பத்தில் ஒரு நபா் மட்டுமே இணைய முடியும் என்று தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai