ஆழ்துளைக் கிணறுகள்: பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு

பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காா்கோணம் ஊராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் மூடப்பட்ட பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறு.
காா்கோணம் ஊராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் மூடப்பட்ட பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறு.

பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பள்ளிகள் மற்றும் அவற்றின் அருகே பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட உத்தரவிட்டாா்.

அதன்படி, துரிஞ்சாபுரம் ஒன்றியம், காா்கோணம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை தேவையான பாதுகாப்புடன் மூட நடவடிக்கை எடுத்தாா்.

மேலும், பள்ளிக்கு அருகாமையில் பயன்பாடற்ற நிலையில் இருந்த 2 ஆழ்துளைக் கிணறுகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ரவி, உதவி ஆசிரியா் முகேஷ், ஊராட்சிச் செயலா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com