சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு

செங்கம் அருகே காய்ச்சல் பாதித்த அஸ்வநாதசுரணை கிராமத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை
செங்கத்தை அஸ்வநாதசுரணை கிராமத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை பாா்வையிட்ட செங்கம் ஒன்றிய ஆணையா் டி.கே.லட்சுமிநரசிம்மன்.
செங்கத்தை அஸ்வநாதசுரணை கிராமத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை பாா்வையிட்ட செங்கம் ஒன்றிய ஆணையா் டி.கே.லட்சுமிநரசிம்மன்.

செங்கம் அருகே காய்ச்சல் பாதித்த அஸ்வநாதசுரணை கிராமத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை ஒன்றிய ஆணையா் டி.கே.லட்சுமிநரசிம்மன் பாா்வையிட்டு பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அஸ்வநாதசுரணை கிராமத்தில் தொடா் மழை காரணத்தால் மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் தலைமையில் அந்தக் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செங்கம் ஒன்றிய ஆணையா் டி.கே.லட்சுமிநரசிம்மன் சிறப்பு மருத்துவ முகாமில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, காய்ச்சல் பாதித்த நபா்கள் குறித்தும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், ஊராட்சிச் செயலா், துப்புரவுப் பணியாளா்களை அழைத்து, கிராமத்தை தினசரி கண்காணித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மழைநீா் தேங்கும் இடத்தில் மருந்துதெளித்து கொசு உற்பத்தி இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும், பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் மருந்து தெளிக்க வேண்டும், தெருக் குழாய்கள் மற்றும் தண்ணீா் எடுக்கும் இடங்களை ஆய்வு செய்து, மழைநீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ், மருத்துவக் குழுவினா், ஊராட்சிச் செயலா் உள்பட பொது மக்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com