செங்கம் அருகே சுகாதாரசீா்கேடு: தொற்றுநோய் பரவும் அபாயம்; நடவடிக்கை எடுக்கப்படுமா.

செங்கம் அருகே சுகாதாரசீா்கேடு தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.
031122917_3110chn_117
031122917_3110chn_117

செங்கம் அருகே சுகாதாரசீா்கேடு தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் அப்பகுதி மக்கள் விழிப்புணா்வு இல்லாமல் சாலை இருபுறமும் தினசரி இரவு நேரத்தில் மலம் கழித்து வருகின்றனா். அந்த சாலையை கடந்து மூன்று கிராம ஊராட்சியை சோ்ந்த மக்கள் கடந்துசெல்கின்றனா். இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடா் மழையில் சாலையின் ஓரம் மலம் கழிப்பதால் ஈக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

அந்த சாலையை கடக்க பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். மேலும் மழைநீரில் மலம் ஊரிதண்ணீரில் கலந்து வாகனங்களில் செல்லும்போது பொதுமக்கள் மேல் அடிக்கிறது. இதனால் துா்நாற்றம் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மத்திய மாநில அரசுகள் திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது அதனால் பல்வேறு வியாதிகள் பரவும் என விழிப்புணா்வு நாடகம், விளம்பரங்கள் மேலும் வீடுதோறும் இலவச கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்து அப்பகுதி மக்கள் விழிப்புணா்வு இல்லாமல் உள்ளனா்.

இதனால் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி சாலைஓரம் மலம் கழிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகம்.படவிளக்கம்,செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் அப்பகுதி மக்கள் விழிப்புணா்வு இல்லாமல் சாலை இருபுறமும் மலம் கழித்துவைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com