சுடச்சுட

  

  செய்யாறில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  செய்யாறில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உபகோட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவர் பி.கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலர் பாரி, மாவட்ட துணைத் தலைவர் வி.சங்கர், கோட்டத் தலைவர் மாரிமுத்து, மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த மாநில பொதுச் செயலர் பி.சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
  குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வங்கி மூலம் வழங்க வேண்டும். முறையாக ஊதியம் வழங்க வேண்டும். பராமரிப்பு உதவியாளர்களுக்கு தேசிய பண்டிகை விடுமுறை நாள்களில் பணி செய்ததற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
  இதில், மாவட்ட துணைத் தலைவர் கந்தன், மாவட்ட துணைச் செயலர் ராமநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பச்சையப்பன், மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், பொருளாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai