சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்ட நியாயவிலைக் கடைகளுக்குத் தேவையான 2,400 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தது.
  திருவண்ணாமலை மாவட்ட நியாயவிலைக் கடைகளுக்குத் தேவையான அரிசி அண்மைக்காலமாக வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
  அதன்படி, ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட 2,400 டன் ரேஷன் பச்சரிசி சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு வந்தது.
  பின்னர், அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டு லாரிகள் மூலம் திருவண்ணாமலையை அடுத்த புதுமண்ணை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேவைப்படும்போது கிடங்கில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai