சுடச்சுட

    

    தூய்மை கிராமம் கணக்கெடுப்பு: ஊராட்சிச் செயலர்களுக்குப் பயிற்சி

    By DIN  |   Published on : 13th September 2019 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை கிராமம் கணக்கெடுப்புப் பணி குறித்து கிராம ஊராட்சிச் செயலர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
    தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு, செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி.மூர்த்தி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சத்யா, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் 
    குமரன் ஆகியோர் தூய்மை கிராமம் திட்டத்தில் மக்களின் பங்களிப்புடன் திருவண்ணாமலை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டுவருவது குறித்து ஊராட்சிச் செயலர்கள், களப்பகுதி வழிநடத்துநர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், செய்யா று ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai