சுடச்சுட

  

  மாவட்ட ஆங்கில பேச்சுப் போட்டி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 13th September 2019 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப்படும் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் 18 முதல் 29 வயதுக்கு உள்பட்டோர் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து நேரு யுவகேந்திரா இளைஞர் நலம், விளையாட்டு அமைச்சகத்தின் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஆ.இங்கர்சால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  நேரு யுவகேந்திரா சார்பில், மாவட்டம், மாநில, தேசிய அளவில் நாட்டுப்பற்று மற்றும் தேச கட்டமைப்பு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 29 வயதுக்கு உள்பட்டோர் பங்கேற்கலாம். ஆங்கில மொழியில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
  பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ. ஆயிரம் என பரிசுகள் வழங்கப்படும். இதேபோல, மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு  முறையே ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசுகளும், தேசிய அளவில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு   முறையே ரூ.2 லட்சம், ரூ. ஒரு லட்சம், ரூ.50 ஆயிரம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
  மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்போர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மார்பளவு புகைப்படம், பிறந்த தேதி, ஆதார்அட்டை நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் (நேரு யுவகேந்திரா) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04175235707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் 
  தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai