சுடச்சுட

  

  முதியோர் நலனுக்காக  பாடுபடுவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 13th September 2019 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, சிறப்பாக செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அளவில் அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, சிறப்பாகச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  எனவே, முதியோர் நலனில் சிறப்பாகச் செயலாற்றிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் தங்களின் நடவடிக்கைகளை அறிக்கையாகவும், புகைப்படச் சான்றுகளுடன் உரிய கருத்துருவாகவும் மாவட்ட முதியோர் நலக் குழுவின் பரிந்துரையுடன் சமர்ப்பிக்கலாம்.
  அதன்படி, தகுதியானோர் கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலர், 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai