சுடச்சுட

    

    விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 13th September 2019 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை வட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனர்.
    திருவண்ணாமலை வட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 
    இதில், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடமும், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் இந்தப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடமும் பிடித்தனர்.
    மேலும், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்துப் போட்டியில் இந்தப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்.
    போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளி அறக்கட்டளைத் தலைவர் சீனி.கார்த்திகேயன், பள்ளிச் செயலரும், தாளாளருமான அருள்விழி கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் காயத்ரி, தலைமை ஆசிரியர் ஆனந்தன், இடைநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேஷ் உள்ளிட்டோர் வியாழக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai