4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியின்போது இறந்த 4 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியின்போது இறந்த 4 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
தண்டராம்பட்டு வட்டம், அகரம் பள்ளிப்பட்டு கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் ராமர். இவர், 2018 ஜனவரி 12-ஆம் தேதி பணியின்போது இறந்ததால், இவரது மனைவி சிவகாமிக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது. கீழ்பென்னாத்தூர் வட்டம், பூதமங்கலம் கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் மு.நடேசன். இவர், 2014 டிசம்பர் 12-ஆம் தேதி பணியின்போது இறந்ததால், இவரது மகன் தங்கராஜுக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறையில்...: நெடுஞ்சாலைத் துறையின் செங்கம் உள்கோட்டத்தில் சாலைப் பணியாளராகப் பணியாற்றி வந்தவர் கோவிந்தன். இவர், 2008 ஏப்ரல் 4-ஆம் தேதி பணியின்போது இறந்ததால், இவரது மனைவி சித்ராவுக்கு கருணை அடிப்படையில் சாலைப் பணியாளர் பணி வழங்கப்பட்டது.
செங்கம் உள்கோட்டத்தில் சாலைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவர் நாராயணசாமி. இவர், 2003 ஏப்ரல் 28-ஆம் தேதி பணியின்போது இறந்ததால், இவரது மகன் ஆனந்தனுக்கு திருவண்ணாமலை வருவாய்க் கோட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கப்பட்டது.
இவர்கள் நால்வருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நால்வரின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சு.ஜானகி, வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com