போளூரில் ரயில்வே மேம்பாலப் பணி ஆய்வு

போளூரில் போளூர் - வேலூர் சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை ஆரணி மக்களவைத்

போளூரில் போளூர் - வேலூர் சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
போளூரில் போளூர் - வேலூர் சாலையில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த கடவுப்பாதைப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையின்பேரில், முன்னாள் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையின் நிதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கியது.
இந்தப் பணியை ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் பிஎம்ஜி.பழனி, மாவட்ட பொதுச் செயலர் எம்.ஜி.ஆசைத்தம்பி, வட்டாரத் தலைவர் என்.ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் காசிராஜன், திருஞானசம்பந்தம், சிவாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com