வேலூரில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை விரைவில் வேலூரில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை விரைவில் வேலூரில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் முன்னாள் முப்படை ராணுவ வீரர் நல சேவை மையம் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
முன்னாள் முப்படை ராணுவத்தினரின் ஓய்வூதியம், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, ராணுவத்தினர் இறந்தப் பின் அவர் குடும்பத்துக்கு தேவையான அனைத்து நல உதவிகள் பெறவும், தமிழக அரசின் ராணுவத்துக்காக அளிக்கப்படும் நலத் திட்டங்களை அறிவிக்கவும், கிராமப்புற இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவதின் அவசியத்தையும், அதற்கு தேவையான இலவச உடற்பயிற்சி அளித்து ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சேவை மையம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் பேசுகையில், தற்போது ராணுவத்தில் கீழ் வகுப்பில் ஹவில்தார், நாயக், சிப்பாய் போன்ற பணி வாய்ப்புகளும், அலுவலர் வகுப்பில் கர்னல் போன்ற பணி வாய்ப்புகளும் உள்ளன. 
மத்திய அரசு தேர்வாணையத்தின் தேர்வுகள் என்றால் ஆர்ஆர்பி, வங்கித் தேர்வு, எஸ்எஸ்சி, ரிசர்வ் வங்கித் தேர்வு போன்ற தேர்வுகளில் மற்ற மாநிலத்தை விட தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே தேர்ச்சி பெற தகுதி அதிகம் இருந்தும் தேர்வுமுறை சார்ந்த போதிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது. மற்ற மாநிலங்களில் இதற்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ளன. 
ஆனால், இதுபோன்ற வேலைவாய்ப்பு சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது வேலூரில் இல்லை. 
மிக விரைவில் கலந்தாலோசித்து போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடத்த பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியில் கே.வீ.குப்பம் எம்எல்ஏ லோகநாதன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் செந்தில்குமார், முப்படை ராணுவ வீரர் நல சேவை மைய தலைவர் குமார், கெளரவ தலைவர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com