பட்டா கோரிய மனுக்கள்: அமைச்சர் உத்தரவு
By DIN | Published On : 19th September 2019 02:01 AM | Last Updated : 19th September 2019 02:01 AM | அ+அ அ- |

ஆரணி பூந்தோட்டம் பகுதியில் பட்டா கோரிய மனுக்களை ஆய்வு செய்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அப்பகுதியினருக்கு உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார்.
ஆரணி அருணகிரிசத்திரத்தில் பூந்தோட்டம் என்ற பகுதி உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
அப்பகுதியினர் பட்டா கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என,
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் முறையிட்டு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு குறித்து பரிசீலனை செய்த அமைச்சர், செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் நில அளவையர்களை அழைத்துக் கொண்டு பூந்தோட்டம் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியினருக்கு உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார்.
அதிமுக ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ப.திருமால், புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.