ஏரியில் மதகுகள் சேதம்: வீணாக வெளியேறும் தண்ணீர்: விவசாயிகள் வேதனை

 சேத்துப்பட்டு அருகே ஏரி நிரம்பி வழியும் தருவாயில், மதகுகள் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.
ஏரியில் மதகுகள் சேதம்: வீணாக வெளியேறும் தண்ணீர்: விவசாயிகள் வேதனை


 சேத்துப்பட்டு அருகே ஏரி நிரம்பி வழியும் தருவாயில், மதகுகள் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது பெரிய ஏரி. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி,  தற்போது பெய்த மழையில் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது. இதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இந்த நிலையில், இவர்களது மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதுபோல, ஏரியின் மதகுகள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. 
மதகு விரிசலை சரிசெய்ய முயற்சித்தும் முடியவில்லை; தண்ணீர் வெளியேறிக்கொண்டுதான் உள்ளது. விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுமே என நினைத்த தண்ணீர் வீணாகிக் கொண்டிருப்பது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும், சேத்துப்பட்டு வட்டாட்சியருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
எனவே, நீராதாரத்தை பெருக்கவும், விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி செய்யவும் தகுதியுடைய இந்த ஏரியை பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் பார்வையிட்டு மதகுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.  வரும் காலங்களில் மழை பெய்தால் ஏரி நிரம்பி, தண்ணீர் பல ஏரிகளுக்குச் சென்றடையும் தருவாயில் உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்பது பொதுமக்கள், விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com