சிறப்பு குறைதீர் முகாம் மனுக்கள் மீது 10 நாள்களில் தீர்வு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்  முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது 10 நாள்களில் தீர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்  முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது 10 நாள்களில் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தகுதியான ரூ.5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் அறிவித்தார்.
இதன் அடிப்படையில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம்களில் ஓய்வூதியம் கோரி அதிக மனுக்கள் வந்துள்ளன. இதன் மீதும், மற்ற மனுக்கள் மீதும் 10 நாள்களில் தீர்வு காணப்பட்டு நலத் திட்ட உதவிகளும், உரிய ஆணைகளும் வழங்கப்படும். 
திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகளை புனரமைக்க அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. 
இந்த நிதி போதாது என தெரிவிக்கப்பட்டதால் கூடுதலாக ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை, திருச்சி, கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர்ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த திருவண்ணாமலை நகராட்சிக்கு உள்பட்ட கட்டபொம்மன் சாலை புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்லவும், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 
பேட்டியின் போது, திருவண்ணாமலையைச்  சேர்ந்த அதிமுக நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com