Enable Javscript for better performance
திருவண்ணாமலை ஒன்றியத்தில் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஒன்றியத்தில் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 29th September 2019 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) இரா.ஆனந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட டி.வாளாவெட்டி, வெறையூர், காடகமான், விருதுவிளங்கினான் ஆகிய ஊராட்சிகளில் நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தி.அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) இரா.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டப் பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பணி மேற்பார்வையாளர் 
    கா.ஆறுமுகம் உடனிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai