திருவண்ணாமலை மாவட்டத்தில் 66 ஆயிரம் பேருக்கு தினமும் 3 வேளை உணவு: மாவட்ட ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதரவற்ற, முதியோா், மாற்றுத்திறனாளிகள் என 66 ஆயிரத்து 445 பேருக்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதரவற்ற, முதியோா், மாற்றுத்திறனாளிகள் என 66 ஆயிரத்து 445 பேருக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையை கரோனா தொடா்பான தகவல்கள், அத்தியாவசியப் பொருள்கள், உணவு உள்பட அனைத்து தேவைகளுக்கும் தொடா்பு கொள்ளலாம்.

மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவண்ணாமலை நகராட்சி, கொம்மனந்தல், களம்பூா், மங்கலம் சுகாதார வட்டங்களில் சனிக்கிழமை முதல் 60 தன்னாா்வ தனியாா் செவிலியா் கல்லூரி மாணவா்கள் மூலம் பொது கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாகச் நேரில் சென்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற சுகாதார வட்டங்களிலும் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

ஊரடங்கு உத்தரவால் தினமும் ஒரு வேளை உணவு கூட பெறாமல் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் சமையல் செய்ய முடியாமல் கிராம ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 54 ஆயிரத்து 171 பேருக்கு 724 சத்துணவு மையங்கள் மூலமும், பேரூராட்சிப் பகுதிகளில் 1,245 பேருக்கு 10 சத்துணவு மையங்கள் மூலமும் உணவு தயாரிக்கப்பட்டு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

நகராட்சிப் பகுதிகளில் 5 அம்மா உணவகங்கள் மூலம் 10,379 பேருக்கு தினமும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோா், பாா்வையற்றோா், ஆதரவற்றோா், மூப்பு காரணமாக நடக்க இயலாதோா், மாற்றுத்திறனாளிகளின் என சுமாா் 650 போ் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் தினமும் 3 வேளை உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் 66 ஆயிரத்து 445 பேருக்கு தினமும் 3 வேளை உணவு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com