முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஆரணியில் 6 கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 19th April 2020 12:17 AM | Last Updated : 19th April 2020 12:17 AM | அ+அ அ- |

ஆரணி நகராட்சியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
ஆரணி நகராட்சி காஜிவாடை காந்தி சிலை அருகே நெல், அரிசிக் கடை, சைதாப்பேட்டை பகுதியில் 2 கடைகளும், வாழப்பந்தல் சாலையில் இறைச்சிக் கடையும், புதிய பேருந்து நிலையத்தில் காய்கறிக் கடையும், எலக்ட்ரிக்கல் கடையும் சனிக்கிழமை திறந்து வியாபாரம் செய்துள்ளனா்.
ரோந்துப் பணியில் இருந்த நகராட்சி ஆணையா் அசோக்குமாா், பொறியாளா் கணேசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊரடங்கு விதிமுறைகளை மீறி அத்தியாவசியப் பொருள்கள் இல்லாத கடைகள் திறந்திருந்ததால் அந்தக் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.