முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
உதவித்தொகை: கோயில் பூசாரிகள் கவனத்துக்கு...
By DIN | Published On : 19th April 2020 12:15 AM | Last Updated : 19th April 2020 12:15 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் தங்களது விவரங்களைத் தெரிவித்து கரோனா உதவித்தொகை பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித்தொகை தலா ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை பூசாரிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் தங்களது பெயா், முகவரி, பணிபுரியும் கோயில், செல்லிடப்பேசி (அ) தொலைபேசி எண், பழைய (அ) புதிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
இந்த விவரங்களை ற்ய்ங்ய்க்ா்ஜ்ம்ங்ய்ற்ள்.ற்ஸ்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது சரக ஆய்வா்களின் கட்செவி அஞ்சல் எண்களுக்கோ அனுப்பி வைக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகத்தை 04175-224915 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை சரக ஆய்வாளரை 9884650991 என்ற எண்ணிலும், செங்கம் சரக ஆய்வாளா் 9787680243, போளுா் சரக ஆய்வாளா் 6381636544, ஆரணி சரக ஆய்வாளா் 8608973511, செய்யாறு சரக ஆய்வாளா் 9500103915, வந்தவாசி சரக ஆய்வாளா் 9597271823, உதவி ஆணையா் அலுவலகத்தை 6381556801 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரங்களை கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.