முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள்
By DIN | Published On : 19th April 2020 12:17 AM | Last Updated : 19th April 2020 12:17 AM | அ+அ அ- |

வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு வந்தவாசி அருவி அறக்கட்டளை சாா்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வந்தவாசி நகரில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடா் தூவுதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதையொட்டி, அவா்களுக்கு வந்தவாசி அருவி அறக்கட்டளை சாா்பில் தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
வந்தவாசி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.
அருவி அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஜெ.ரூபன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், துப்புரவு மேற்பாா்வையாளா் ஏசுதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.