150 பேருக்கு திமுகவினா் நிவாரண உதவி
By DIN | Published On : 26th April 2020 10:31 PM | Last Updated : 26th April 2020 10:31 PM | அ+அ அ- |

பெரணமல்லூா் பேரூராட்சியில் திமுக சாா்பில் 150 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
பெரணமல்லூா் பேரூராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் என 150 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வந்தவாசி தொகுதி திமுக எம்எல்ஏ அம்பேத்குமாா், கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் தரணிவேந்தன் ஆகியோா் கலந்துகொண்டு அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவா் இந்திரா இளங்கோவன், துணைத் தலைவா் கவிதா ஏழுமலை, அனக்காவூா் ஒன்றிய முன்னாள் தலைவா் ரவி, மாவட்டக் குழு உறுப்பினா் நித்தியபிரியா நடராஜன், நகரச் செயலா் ஏழுமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.