6 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
By DIN | Published On : 26th April 2020 10:35 PM | Last Updated : 26th April 2020 10:35 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால், கீழ்பென்னாத்துாா், வந்தவாசி, போளூா், செய்யாறு பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.