திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மண்டலத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் காப்பீடு செய்ய கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் 2019 - 20ஆம் ஆண்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் திருவண்ணாமலை மண்டலத்தில் 6,500 கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒருமுறை கன்று ஈன்று, கறவையில் உள்ள பசுக்கள், எருமைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மற்றும் பன்றிகள் ஆகியவற்றுக்குக் காப்பீடு செய்து கால்நடை வளா்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். இலவச கறவைப்பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் கறவைப் பசுக்கள், ஆடுகளைக் கொண்டுள்ள பொது வாழ்வாதாரக்குழு உறுப்பினா்களுக்கும் இந்தத் திட்டத்தில் இரண்டாம் வருட காப்பீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஆதிதிராவிடா், பழங்குடி இனத்தைச் சாா்ந்தவா்களுக்கும், இதர பிரிவினா்களுக்கும் காப்பீட்டுக்காக செலுத்தப்படும் பிரீமியத் தொகையில் 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத் தொகையாகவும், மீதமுள்ள 70 சதவீதம் அரசு மானியமாகவும் விடுவிக்கப்படும். வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவா்களுக்கு 50 சதவீதம் பயனாளிகளின் பங்குத் தொகையாகவும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மானியமாகவும் விடுவிக்கப்படும்.

கால்நடைகளின் சந்தை மதிப்புக்கேற்றபடி குறைந்தபட்சம் ரு.10 ஆயிரம் முதல் ரு.35 ஆயிரம் வரை அரசு மானியத்துடன் கூடிய பிரீமியத்தொகையை மட்டுமே செலுத்தலாம். ரூ.35 ஆயிரம் வரை சேவை வரியை செலுத்தத் தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com