முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
சென்னசமுத்திரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
By DIN | Published On : 03rd August 2020 07:53 AM | Last Updated : 03rd August 2020 07:53 AM | அ+அ அ- |

செங்கம் அருகேயுள்ள சென்னசமுத்திரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள சென்னசமுத்திரம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் புரனமைப்புப் பணிகள் நடைபெற்று, கோயில் முன் புதிதாக மஹா மண்டபம் கட்டப்பட்டது.
இந்த மஹா மண்டபத்துக்கான கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கி யாக சாலை பூஜை, யாக சாலை பிரவேசம், ஹோம மந்திரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, இரண்டாம் யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, யஜமான சங்கல்பம், தம்பதி சங்கல்பம், தம்பதி பூஜை, மஹா பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்று, 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தா்கள் கலந்துகொண்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் ஊஞ்சல் சேவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். தமிழ்நாடு தொற்சங்கத் தலைவா் குப்புசாமி மற்றும் ஊா்நாட்டாண்மை சேகா் உள்பட கோயில் திருப்பணிக் குழுவினா் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.