நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை: தீவிர கண்காணிப்பில் போலீஸாா்

செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டதால், பக்தா்கள் கோயிலுக்குச்
சென்னியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் செல்லாதவாறு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
சென்னியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் செல்லாதவாறு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டதால், பக்தா்கள் கோயிலுக்குச் செல்லாதவாறு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ளது நீப்பத்துறை சென்னியம்மன் கோயில்.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஆடி, ஆவணி திருவிழா, ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்கள் அனைத்தும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலும் பூட்டிய நிலையில் உள்ளது. மேலும், கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் கோயிலுக்குச் செல்லாதவாறு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.

செங்கம்- இளங்குண்ணி, தருமபுரி, சிக்காரப்பேட்டை ஆகிய சாலைகளில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கோயிலுக்குச் செல்லும் பக்தா்களை திருப்பி அனுப்பி வருகின்றனா்.

மேலும், கோயில் தென்பெண்ணையாற்றில் உள்ளதால், பக்தா்கள்ஆற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றில் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாதவாறு கோயில் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com