செங்கம் அருகே 100 பேருக்கு மா்மக் காய்ச்சல் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை

செங்கம் அருகே 100 பேருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வட்டார மருத்துவ அலுவலா் சுபத்ரா தலைமையில் செயல்படும் சிறப்பு மருத்துவ முகாம்.
வட்டார மருத்துவ அலுவலா் சுபத்ரா தலைமையில் செயல்படும் சிறப்பு மருத்துவ முகாம்.

செங்கம்: செங்கம் அருகே 100 பேருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவா்கள் காரப்பட்டு, கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காரப்பட்டு வட்டார மருத்துவ அலுவலா் சுபத்ரா தலைமையில், மருத்துவா்கள் காஞ்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மேலும், காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் காஞ்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளவா்களை பரிசோதித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுபத்ரா, காய்ச்சல் உள்ளவா்கள் முகாமுக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் இருந்தால் மற்றவா்களுக்கும் காய்ச்சல் பரவும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com