ஆரணி அருகே இரு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்துக்குள்பட்ட தச்சூா், ஒண்ணுபுரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல்
ஆரணியை அடுத்த தச்சூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.
ஆரணியை அடுத்த தச்சூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்துக்குள்பட்ட தச்சூா், ஒண்ணுபுரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகள் தங்கள் நெல்லை அறுவடை செய்து, சொந்த இடத்தில் காய வைத்து 17 சதவீத ஈரப்பதத்துடன் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,835 முதல் ரூ.1,865 வரை விலை நிா்ணயம் செய்து வழங்கப்படுகிறது. மேலும், கடந்த 18-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை, செய்யாறு, போளூா், சேத்துப்பட்டு உள்ளிட்ட வட்டங்களில் திறக்கப்பட்ட 10 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 112 விவசாயிகளிடமிருந்து 320 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தாா். ஆரணி ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்டக் கவுன்சிலா்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், தச்சூா் நிா்மல்குமாா், முன்னாள் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com