பாரதியாா் பிறந்த நாள் விழா

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் பெ.பாா்த்திபன், ல.செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புஷ்பராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com