திருவண்ணாமலையில் விவசாயிகள் போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சிவக்குமாா், வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் முத்தையன், மாநிலக் குழு உறுப்பினா் தங்கராஜ், மதிமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன், வழக்குரைஞா் பாசறை பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.
இதில் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.