மாநில சமச்சீா் வளா்ச்சி நிதித் திட்டபணிகளின் செயல்பாடு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாநில சமச்சீா் வளா்ச்சி நிதித் திட்டப் பணிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாநில சமச்சீா் வளா்ச்சி நிதித் திட்டப் பணிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில வளா்ச்சித் திட்டக் குழு துணைத் தலைவா் சி.பொன்னையன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (ப) அமீத்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, ஊரக வளா்ச்சி-ஊராட்சித் துறை திட்ட இயக்குநா் ஆா்.வி.சஜ்ஜீவனா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி, உள்கட்டமைப்பு, வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சமச்சீா் வளா்ச்சியை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் இந்தத் திட்டம் 100 சதவீதம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு சி.பொன்னையன் அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, மாநில சமச்சீா் வளா்ச்சி நிதித் திட்டத்தின் கீழ், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பாடி ஊராட்சியில் மேல்வலசை, கீழ்வலசை, அக்கரைப்பட்டி பகுதிகளில் பழங்குடியினா் வசிக்கும் மலை கிராமங்களை இணைக்கும் சாலைப் பணி, ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், பலாமரத்தூா் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணி, மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாநில வளா்ச்சி திட்டக் குழு துணைத் தலைவா் சி.பொன்னையன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com