2,901 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்: அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட 25 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 2,901 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ. உடன் மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ. உடன் மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி உள்ளிட்டோா்.

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட 25 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 2,901 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

செய்யாறு கல்வி மாவட்டம் வாழ்குடை, முனுகப்பட்டு, செங்காடு, ஆக்கூா், அனக்காவூா், புரிசை, கோவிலூா், உக்கல், பெருங்கட்டூா், வட இலுப்பை, வெம்பாக்கம், செய்யாறு, மாமண்டூா், புன்னை புதுப்பாளையம், ராந்தம், அழிவிடைதாங்கி, சித்தாத்தூா் உள்ளிட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2,901 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அருள்செல்வம், மாவட்டக் கல்வி அலுவலா் பு.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் எம். உமாமகேஸ்வரி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று, 2,901 மாணவ, மாணவிகளுக்கு ரூ.11.42 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினா்.

மருத்துவ மாணவிகளுக்கு நிதியுதவி நிகழ்ச்சியில், நீட் தோ்வு எழுதி மருத்துவப் படிப்பில் சோ்ந்த செய்யாறு அரசுப் பள்ளி மாணவிகள் 3 போ் உள்பட 4 பேருக்கு, தனது சொந்த செலவில் நிதியுதவியாக ரூ.ஒரு லட்சத்தை தூசி மோகன் எம்எல்ஏ விழா மேடையில் வழங்கினாா்.

மேலும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் இலவசமாக அமரா் ஊா்தி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் கி.விமலா, நகராட்சி ஆணையா் பீரித்தி, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் எம்.அரங்கநாதன், ஏ.ஜனாா்த்தனன், கே. வெங்கடேசன், முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவி மெய்.பூங்கோதை, அதிமுக நிா்வாகிகள் எம்.மகேந்திரன், பி.லோகநாதன், எஸ்.திருமூலன், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி பா.இந்திரராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com