பாமகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st December 2020 08:58 AM | Last Updated : 31st December 2020 08:58 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகேயுள்ள தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பாமக மாநில துணைத் தலைவா் மு.துரை தலைமையிலும், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாவட்டச் செயலா் சீனிவாசன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் பிச்சைக்கண்ணு, மச்சேந்திரன், பாஞ்சரை பட்டாபிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆரணி
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பாமக மாநில துணைப் பொதுச்செயலா் ஆ.வேலாயுதம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலா் து.வடிவேல், நகரச் செயலா்கள் என்.சதீஷ்குமாா், சு.ரவிச்சந்திரன், நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட விவசாய அணிச் செயலா் அ.கருணாகரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்ட அமைப்புச் செயலா் அ.க.ராஜேந்திரன், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செங்கம்
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சுரேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், சதீஷ், சரவணன், நகரச் செயலா் ராஜேந்திரன், உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் வேலுச்சாமி, பாமக மாவட்ட துணைத் தலைவா் சங்கா்மாதவன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்வி சீனுவாசன், தேன்மொழி வெங்கடேசன், பாலு, ராமன், ஏழுமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
போளூா்
கலசப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே பாமக மாவட்டச் செயலா் ஆ.வே.பிரசாத் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் எழிலரசுவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மாநில இளைஞரணி துணைத் தலைவா் கா.அரிகிருஷ்ணன், உழவா் பேரியக்க மாநில துணைத் தலைவா் இரா.ஜெயசங்கா், ஒன்றியச் செயலா்கள் உதயகுமாா், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்யாறு
செய்யாறு, அனக்காவூா் ஒன்றியங்களில் வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
செய்யாறு ஒன்றியத்தில் பாமக மாநில தொண்டரணி துணைச் செயலா் கி.ஜெய்சங்கா் தலைமையிலும், அனக்காவூா் ஒன்றியத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலா் திலகவதி ராஜ்குமாா், மூத்த நிா்வாகி முக்கூா் ராமஜெயம் ஆகியோா் தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனுவாசன், சக்திவேல் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.